திருச்சி நகரின் சில பகுதிகளில் நாளை குடி நீர் வினியோகம் ரத்து

திருச்சி நகரின் சில பகுதிகளில் நாளை குடி நீர் வினியோகம் ரத்து
X
திருச்சி நகரின் சில பகுதிகளில் நாளை குடி நீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நகரின் சில பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்துகுழாயில் மார்ச் 4ம் தேதி உடைப்பு ஏற்பட்டதின் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தில்லைநகர். அண்ணாநகர், காஜாபேட்டை, கருமண்டபம், கண்டோன்மெண்ட், ஜங்ஷன் கல்லாங்காடு, மிளகுபாறை,பழைய எல்லக்குடி, ஆலத்தூர் புகழ்நகர், பாரி நகர், சந்தோஷ்நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பகுதிகளில் நாளை மார்ச் 6 ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

7-3-2024 முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் நடைபெறும். எனவே பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு தங்களது குடிநீர் தேவைகளை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சி நிர்வாகத்தோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் சரவணன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags

Next Story