திருச்சி நகரம் முழுவதும் 13-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி நகரம் முழுவதும் 13-ம் தேதி  குடிநீர் வினியோகம் ரத்து
X
திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவன் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1, 2, 3 தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் 13 -9 -2022 அன்று காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் விநியோகம் இருக்காது. எனவே ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவி நகர், தேவதானம் அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான பிறகு பேட்டை, மகாலட்சுமி நகர், நேருஜி நகர், அரியமங்கலம், உக்கடை ,அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பா, நகர் ரயில் செந்தமிழ் புரம், சங்கிலியாண்ட புரம், பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தர் நகர், ஜே.கே. நகர், மேல கல்கண்டார் கோட்டை ,பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலைய பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜா நகர், காஜாமலை, தேசாத்தனூர்,கே. கே. நகர் ,தென்றல் நகர், ஆனந்த் நகர் ,சத்தியவாணி முத்துநகர் ,ஐயப்பன் நகர், மற்றும் கோ அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமா நகர், சிவா நகர், ரெயின்போ நகர் ,செல்வா நகர் ஆனந்தம் நகர், பாரதி நகர் புத்தூர் பகுதி, எடமலைப்பட்டி புதூர் ,அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் 13/9/2022 அன்று குடிநீர் வினியோகம் நடைபெறாது. மறுநாள் 14 -9- 2022 வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு பதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்