திருச்சி மாநகராட்சி பகுதியில் செப்.11ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் செப்.11ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
X
திருச்சி மாநகராட்சி பகுதியில் செப்.11ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 10.09.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை, சிந்தாமணி, தில்லைநகர், அண்ணா நகர், கண்டோன்மென்ட், ஐங்ஷன், காஜாபேட்டை, கருமண்டபம், இராமலிங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, Society காலனி, எம்.எம். நகர், தேவதானம், மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகனாதபுரம், திருவெறும்பூர், வள்ளுவர் நகர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், மற்றும் கணேஷ் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 11.09.2024 ஒருநாள் இருக்காது.

12.09.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!