திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் தகவல்
X
திருச்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் நிறுத்தம். மாநகராட்சி ஆணையர் தகவல்.

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் கொள்ளிடம் கிணறு நீர் உந்துநிலையத்தில் இருந்து உந்தப்படும் பிரதான நீரூந்து குழாயில் உறையூர் நாச்சியார் கோவில் சாலையில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. குழாயில் ஏற்பட்ட பழுதினை சரி செய்திடும் பொருட்டு, மாநகராட்சியால் இன்று (சனிக்கிழமை) பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் புத்தூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. 13-ந் தேதி அன்று வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!