திருச்சி நகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி நகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து
X
திருச்சி நகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் பிப்ரவரி 21ம்தேதி குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் பராமரிப்பு பணி 20.02.2024 அன்று காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளிலும், 21.02.2024 ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

22.02.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் மிகவும் கலங்கலாக செம்மண் நிறத்தில் வருவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. தெளிவான குடிநீர் வழங்குவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பதும் மாநகராட்சி பகுதியில் குறிப்பாக திருச்சி விமான நிலையம், மற்றும் கேகேநகர், காஜாமலை பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!