திருச்சி மாநகராட்சி பகுதியில் பிப். 15-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்.
திருச்சி நகரில் நாளை 15ந்தேதி குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட , ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110 / 11 கே.வி. துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் 15.02.2023 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது .
எனவே , மண்டலம் -1 மேலூர் , தேவிஸ்கூல் , பாலாஜி அவென்யூ , பெரியார் நகர் , திருவானைக்கோவில் , அம்மாமண்டபம் , ஏ.ஐ.பி.இ.ஏ. நகர் , தேவதானம் மண்டலம் -2 விறகுப்பேட்டை புதியது , சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது , கல்லுக்குழி புதியது , கல்லுக்குழி பழையது , சுந்தராஜநகர் புதியது , சுந்தராஜபுரம் பழையது , காஜாமலை புதியது , மண்டலம் -3 அரியமங்கலம் கிராமம் , அரியமங்கலம் உக்கடை , தெற்குஉக்கடை , ஜெகநாதபுரம் புதியது , ஜெகநாதபுரம் பழையது , மலையப்பநகர் புதியது , மலையப்ப நகர் பழையது , ரயில்நகர் புதியது , ரயில்நகர் பழையது , மகாலெட்சுமி நகர் , முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது , முன்னாள் இராணுவத்தினர் காலனி பழையது , மேலகல்கண்டார் கோட்டை செக்ஸன் ஆபிஸ் , மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி , மேலகல்கண்டார்கோட்டை நூலகம் , பொன்னேரிபுரம்புதியது , பொன்னேரிபுரம்பழையது , பொன்மலைப்பட்டி , ஐஸ்வர்யாநகர் , மண்டலம் -4 ஜே.கே. நகர் , செம்பட்டு , காமராஜ்நகர் , எல்ஐசி காலனி புதியது , எல்ஐசி காலனி சுப்பிரமணிய நகர் , தென்றல்நகர் புதியது , தென்றல்நகர் பழையது , தென்றல்நகர் இ.பி.காலனி , வி.என் . நகர் புதியது , வி.என் . நகர் பழையது , சத்தியவாணி முத்து கே.கே நகர் , சுப்பிரமணிய நகர் புதியது , சுப்பிரமணிய நகர் பழையது , ஆனந்த நகர் , கே.சாத்தனூர் , பஞ்சப்பூர் , அம்மன் நகர் , கவிபாரதிநகர் , எடமலைப்பட்டிபுதூர் புதியது , காஜாமலை பழையது , கிராப்பட்டிபுதியது , கிராப்பட்டி பழையது , அன்புநகர் பழையது , அன்புநகர் புதியது , ரெங்காநகர் , மண்டலம் -5 மங்கலம் நகர் , சிவாநகர் , உறையூர் புதியது , உறையூர் பழையது , பாத்திமா நகர் , ரெயின்போ நகர் , செல்வாநகர் , ஆனந்தம் நகர் , பாரதிநகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 15.02.2023 அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது .
மறுநாள் 16.02.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரைசிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu