திருச்சி டாக்டர் எம்.ஏ. அலீமிற்கு அமெரிக்க நரம்பியல் அகாடமி விருது

திருச்சி டாக்டர் எம்.ஏ. அலீமிற்கு அமெரிக்க நரம்பியல் அகாடமி விருது

திருச்சி டாக்டர் எம்.ஏ. அலீம்.

திருச்சியை சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அலீம் அமெரிக்க நரம்பியல் அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்த டாக்டர் அலீம் அமெரிக்க நரம்பியல் அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க நரம்பியல் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நரம்பியல் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவ நிபுணர்களுக்கு ஏ.பி.பேக்கர் ஆசிரியர் அங்கீகார விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணரும், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற துணை முதல்வருமான டாக்டர் எம்.ஏ.அலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய நரம்பியல் அகாடமி மற்றும் கிளாஸ்கோவின் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ராயல் கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story