வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் திருச்சி  விமான நிலையத்தில் கைது
X
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கருர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியை சேர்ந்த அப்துல்பாரி மகன் ஷேக்பரீத் (வயது 34) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த போது தேடப்படும் குற்றவாளி என என்.ஓ.சி. வழங்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஷேக்பரீத்தை விமான நிலைய போலீசாரிடம் இமிகிரேசன் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த 2020-ஆம் ஆண்டில் கரூர் மாவட்ட மகளிர் போலீசார் வரதட்சனை கொடுமை வழக்குப்பதிந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு தப்பியது தெரிய வந்தது.

இது குறித்து கருர் மாவட்ட மகளிர் போலீசாருக்கு ஏர்போர்ட் போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருச்சிக்கு வந்த அனைத்து மகளிர் போலீசார் ஷேக்பரீத்தை கைது செய்து கரூருக்கு அழைத்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!