திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை பட்ஜெட் விளக்க தி.மு.க. பொதுக்கூட்டம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை  பட்ஜெட் விளக்க தி.மு.க. பொதுக்கூட்டம்
X

கே.என்.நேரு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை பட்ஜெட் விளக்க தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்புகளை விளக்கியும், உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாபெரும் தி.மு.க. பொதுக்கூட்டம் திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் நாளை மாலை 6 மணி அளவில் நடக்கிறது.

கூட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி தலைமை தாங்குகிறார். திருவரங்கம் பகுதி கழக செயலாளர் ராம்குமார் வரவேற்று பேசுகிறார். சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி முன்னிலை வகிக்கிறார்.

இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Tags

Next Story