திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 2-வது நாளாக விருப்ப மனு

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 2-வது நாளாக விருப்ப மனு
X

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு வினியோகம் இரண்டாவது நாளாக நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தலுக்கான விருப்ப மனு வழங்குவதை நேற்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காட்டூர் பகுதி கழக செயலாளர் நீலமேகம் வார்டு எண் 42 மற்றும் திவ்யாதனுஷ் வார்டு எண் 32 ஏ.எம்.ஜி. விஜய்குமார் வார்டு எண் 16, நூர்முகமது, தனலட்சுமி, முனீஸ்வரன் ஆகியோர் வார்டு எண் 33 ஆகியவற்றிற்கானமனுக்களை பெற்றுக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் 293 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மதியம் வரை சராசரியாக 100 மனுக்களும் பெற்றுள்ளனர்.

30-11-2021 வரை மனு வழங்கப்படுவதும், மனு பெறுவதும் தொடரும் என மாவட்ட கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!