தி.மு.க.வுடன் நட்பு, உறவு இல்லை- பாரிவேந்தர் எம்.பி. திருச்சியில் பேட்டி

தி.மு.க.வுடன் நட்பு, உறவு இல்லை- பாரிவேந்தர் எம்.பி. திருச்சியில் பேட்டி
X

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கோயில்களுக்கு பாரிவேந்தர் எம்.பி. நிதி வழங்கினார்.

தி.மு.க.வுடன் எங்களுக்கு உறவும் இல்லை, நட்பும் இல்லை என்று பாரிவேந்தர் எம்.பி. திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கோயில்களுக்கு நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றுது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் கலந்து கொண்டு தனது பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலய பணிகளுக்காக, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.66 லட்சத்தை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

புதிய கோவில்கள் கட்டவும், பழைய கோவில்களை புணரமைக்கவும், பழுதான நிலையில் உள்ள தேர் சக்கரங்களை சீர் செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்டு, அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். திராவிட இக்கத்தினர்கள் கூட இறைவனை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ள பாதிப்பின் போதும் நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்பவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகள்.ஒழுக்கம் உள்ளவர்கள், தூய்மையானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டும். ஒரு கட்சி, ஒரு குடும்பம் மட்டும் ஆட்சி அதிகாராத்திற்கு வருவது ஜனநாயகம் ஆகாது. எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கச் செய்வது தான் ஜனநாயகம். தி.மு.க.வுடன் எங்களுக்கு நட்பும் இல்லை, உறவும் இல்லை, அவர்களை எதிர்க்கவும் இல்லை.

அரசியலில் சிலர் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள ஜெய்பீம் பட பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். தொழில் உரிமை தனி மனித உரிமையில் யாரும் தலையிட கூடாது. அந்த படத்தில் வந்த பொம்மையை வைத்து பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனையை கையில் எடுத்திருப்பவர்களின் முக்கிய நோக்கம் பணமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture