முதல் அமைசசர் பற்றி அவதூறு: தி.மு.க. ஐ.டி. விங் போலீஸ் கமிஷனரிடம் மனு

போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுப்பதற்காக தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியினர் வந்தனர்.
திருச்சி தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தென்னூரை சேர்ந்த ஒருவர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார். மேலும் சிறைவாசிகளை விடுதலை செய்யாவிட்டால் அனைவரையும் ஒன்று திரட்டி போராடுவேன் என்று பொய் பிரசாரம் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், உண்மைக்கு புறம்பான தகவல்களை காணொலி மூலம் பரப்பி வருகிறார்.
இந்த காணொலிகள் மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும், மதகலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவரது வலைத்தள கணக்குகளை முடக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu