திருச்சி வடக்கு, மத்திய மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் விருப்ப மனு

திருச்சி வடக்கு, மத்திய மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் விருப்ப மனு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் அமைச்சர் நேரு விருப்ப மனு பெற்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி வடக்கு, மத்திய மாவட்டத்தில் தி.மு.க. போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறப்ப்பட்டது.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு இன்று காலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேரில் பெற்றுக் கொண்டார்.

இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு, திருவெறும்பூர் ஒரு பகுதி, ஸ்ரீரங்கம் ஒரு பகுதி மற்றும் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தங்களது விருப்ப மனுக்களை பெற்று, கொடுத்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர் காஜாமலை விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்