திருச்சியில் தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சியில் தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
திருச்சியில் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சியில் தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.ஏ.வி.தினகரன் தலைமை தாங்கினார்.

இதில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு சட்ட ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது, அவற்றை தீர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் துரை வைகோவிற்கு சட்டரீதியாக செய்ய வேண்டிய உதவிகள்,வாக்குப்பதிவு தினத்தன்றும், வாக்கு பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்து செல்லும் போது கண்காணிக்கவேண்டிய பணிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று வழக்கறிஞர் அணி சார்பில் செய்ய வேண்டிய சட்ட ரீதியான பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், ராமசந்திரன் உள்ளிட்ட திமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது