திருச்சி மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்றியது தி.மு.க.

திருச்சி மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்றியது தி.மு.க.
X
திருச்சி மாநகராட்சியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட 47 வார்டுகளில் 33ல் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற 65 வார்டுகளிலும் வாக்கு எண்ணும் பணி வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. கோட்டம் வாரியாக 4 இடங்களில் நடந்து வருகிறது.

இதுவரை 47 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் தி.மு.க. 33வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 5இடங்களிலும், அ.தி.மு.க, ம.தி.மு.க. தலா 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அ.ம.மு.க, ம.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதன் மூலம் அறுதி பெரும்பான்மை பெற்று திருச்சி மாநகராட்சி தி.மு.க. மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது. திருச்சி மாநகராட்சியின் 28 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil