திருச்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு
X
திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 55- வது வார்டு தி.மு.க. வேட்பாளராக வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார்.இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தனது வார்டு முழுவதும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.


இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொன்னகர் குணமளிக்கும் மாதா ஆலயத்தில் வழிபாடு நடத்தி முடித்துவிட்டு வந்த வாக்காளப் பெருமக்களிடம் ராமதாஸ் தான் மாமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிபெற தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் ஜெய நகர் பகுதிக்கு சென்று வீடு வீடாக உள்ள வாக்காளர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து தனக்கு ஆதரவு திரட்டினார்.அவருடன் தி.மு.க. பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் அப்பகுதி இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் சென்றிருந்தனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!