திருச்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

திருச்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் வாக்கு சேகரிப்பு
X

பெண் வாக்காளர் ஒருவருக்கு சால்வை அணிவித்தார் தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ்.

திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 55வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிக்கல்ஸ் வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார். வேட்பாளர் ராமதாஸ் இன்று காலை முதல் மாலை வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இன்று மாலை கருமண்டபம் வசந்த நகர் பகுதியில் வேட்பாளர் ராமதாஸ் வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்