தி.மு.க.வேட்பாளர் புஷ்பராஜுக்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரம்

தி.மு.க.வேட்பாளர் புஷ்பராஜுக்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரம்
X

திருச்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜுக்கு ஆதரவாக அமைச்சர் நேரு  பேசினார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டு தி.மு.க.வேட்பாளர் புஷ்பராஜுக்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரம் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளராக டி. புஷ்பராஜ் போட்டியிடுகிறார். தனது வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற புஷ்பராஜ் வாக்காளர்களிடம் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் 54வது வார்டு தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை தி.மு.க. முதன்மை செயலாளரும், தமிழக நகர்ப்புறவளர்ச்சி துறை அமைச்சருமான கே.என். நேரு திறந்து வைத்து புஷ்பராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போது 54வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எளிதாக சந்திக்க கூடிய புஷ்பராஜ் வெற்றி பெற்றால் தான் உங்களுக்கு நல்லது. நான் எனது சொந்த ஊரில் நான்கு முறை தான் தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் திருச்சி நகரில் ஐந்து முறை போட்டியிட்டு விட்டேன். திருச்சி நகர வளர்ச்சிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆயிரத்து முன்னூறு கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு சென்றிருக்கிறார். இந்த அரசு உங்களுக்கான அரசு. எனவே உள்ளாட்சி நிர்வாகத்திலும் தி.மு.க.வை பெற்றி பெறச்செய்யுங்கள் எனகேட்டுக்கொண்டார்.


இந்த விழாவில் மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்ட செயலாளர் மூவேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவரின் குழந்தைக்கு அமைச்சர் நேரு பெயர் சூட்டினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!