திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு

திருச்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு
X

வேட்பாளர் புஷ்பராஜுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளராக டி புஷ்பராஜ் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தனது வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய புஷ்பராஜ் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும்பணியில் இறங்கினார்.


இன்று காலை வேட்பாளர் புஷ்பராஜ் கண்டோன்மெண்ட் பகுதி ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் காலனியில் வீடுதோறும் சென்று தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து புஷ்பராஜ் வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!