வாக்குறுதி அளித்து தி.மு.க. வேட்பாளர் டி. புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு

வாக்குறுதி அளித்து தி.மு.க. வேட்பாளர் டி. புஷ்பராஜ் வாக்கு சேகரிப்பு
X
வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் புஷ்பராஜுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளர் டி. புஷ்பராஜ் மக்களுக்கு வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி புஷ்பராஜ் தனது வார்டுக்குட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிப்பின்போது வாக்குறுதி அளித்து வருகிறார்.

அவர் அளித்த வாக்குறுதிகளில் இதோ சில...

இந்த வார்டில் தற்போது 2 வேளை குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும்5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சமுதாய கூடம், நூலகம், , சேவை மையம் அமைக்கப்படும். விளையாட்டு மைதானத்திற்காக 2 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. விரைவில் அங்கு கட்டுமான பணி தொடங்கும்.


பெரிய மிளகுபாறை பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக ஆதிதிராவிடர் தெரு, நாயக்கர் தெருக்களில் வீடுகளை அளக்கும் பணி அமைச்சர் நேரு உத்தரவின்படி தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் கள்ளர் தெரு, புதுத்தெரு பகுதிகளிலும் இந்த பணி தொடங்கப்படும்.

மழை நீர் வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் புதிதாக வடிகால் வசதி
ஏற்படுத்தப்படும். அனைத்து தெருக்களிலும் தார்ச்சாலை அமைக்கப்படும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.

இந்த வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார் வேட்பாளர் புஷ்பராஜ்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!