திருச்சி மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் மனு தாக்கல்

திருச்சி மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் மனு தாக்கல்
X

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மு. அன்பழகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று திருச்சி மாநகர தி.மு.க. மாநகர செயலாளரும் 27வது தி.மு.க. வார்டு தி.மு.க. வேட்பாளருமான மு.அன்பழகன் கோ .அபிஷேகபுரம் கோட்டத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

கோ அபிஷேகபுரம் உதவி ஆணையரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான செல்வ பாலாஜியிடம் அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கான திமுக வேட்பாளராக கூறப்படும் இப்போது ஐந்தாவது முறையாக மாநகராட்சி தேர்தலை சந்திக்கினார். 2 முறை கவுன்சிலர், 2 முறை துணைமேயர் என பதவி வகித்த அன்பழகனுக்கு இந்த தேர்தல் முக்கியமானதாக அமைந்துள்ளது.

வேட்பு மனு முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன் திருச்சி மாநகராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளும் முன் நின்று சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த முயல்வேன் என்றும் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!