கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக திருச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை
திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசினார்.
கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர வேண்டும் என தி.மு.க. மத்திய மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மத்திய மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருச்சி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை அனைத்து ஒன்றியம் .நகரங்கள் சார்பில் தொடர்ந்து கொண்டாடுவது. விரைவில் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கழக நிர்வாகிகள் உறுப்பினராக சேர்ந்து கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது அதேபோல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி உணவு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பூத் கமிட்டி பணிகளை சிறப்பாக செய்யவேண்டும் என்ற தலைவர் அவர்களின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் வருகிற 4 -11 -2023 மற்றும் 5 -11 -2018 , நவம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளிலும் நடைபெற இருப்பதால் அந்த முகாம்களில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu