காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாளில் பழ மரக்கன்றுகள் வினியோகம்
காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாளில் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தேச தந்தை மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த தினம் மற்றும் கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் நினைவு தினத்தில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பில் திருச்சி மெயின் காட் கேட்ல் உள்ள அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு பழ வகையிலான கொய்யா, நெல்லி , கொடுக்காப்பள்ளி உள்ளிட்ட மரகன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென்னக நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவன தலைவர் மனித விடியல் மோகன், திருச்சி கிழக்கு செஞ்சிலுவை சங்க தலைவர் பாட்ஷா, மாவட்ட ஆலோசகர் டாக்டர் இளங்கோவன்,ஒயிட் ரோஸ் பொதுநல சங்கத்தின் நிறுவன தலைவர் சங்கர், ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். என். மோகன் ராம், அமிர்தம் அறக்கட்டளை நிறுவனரும் யோகா பயிற்சியாளருமான யோகா விஜயகுமார், சாலை பயனீட்டாளர் நல அமைப்பின் நிர்வாகி அய்யாரப்பன், நோ வுட் வேஸ்ட் நிர்வாகி ராமகிருஷ்ணன், புதிய பாதை அறக்கட்டளை நிர்வாகிகள் தீபலட்சுமி, ஹேமாலதா, அருணாசலம், மக்கள் நல மேம்பாட்டு மையத்தின் நிர்வாகி சாந்தி, சமூக ஆர்வலர் டாக்டர் ஆர்ம்ஸ்டார்ங் ரூபி, டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிர்வாகி பக்கிரிசாமி, சாக்ஸீடு எஸ். சசி குமார் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய தலைவரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து திருச்சி மாவட்ட புறநகர் பகுதியான டால்மியாபுரம் அருகில் உள்ள கீழரசூர் கிராமத்தில் தமிழ் குரல் அறக்கட்டளை சார்பிலும் அதன் நிறுவனர் தலைவர் தங்கமணி தலைமையில் நிர்வாகிகள் டாக்டர் லிவிங்ஸ்டன் தாஸ், சுமித்ரா மகேஷ், தேவி பாலா, ரபீக் அகமது, அருள் செல்வன் 10 ரூபாய் இயக்கத்தின் நிர்வாகி சேட்டு மற்றும் பொதுமக்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொய்யா, நெல்லி, கொடுக்காபள்ளி உள்ளிட்ட பழ வகையிலான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மாணவ மாணவிகளின் கலை நிகச்சியுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu