திருச்சியில் நாளை 40 தொகுதி அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி

திருச்சியில் நாளை 40 தொகுதி அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சியில் நாளை 40 தொகுதி அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டு, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய பாராளுமன்ற தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் புதுச்சேரி தேர்தல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள் மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிட திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுவான சிறப்பு மையம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் அமைத்திட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நாளை (30.04.2024) காலை 09.00 மணி பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அஞ்சல் வாக்குகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் உரிய காவல்துறை பாதுகாப்புடன் தொடர்புடைய தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிடும் பணி நடைபெற உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொpவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது