திமுகவுடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தி; காங்கிரஸ் நிர்வாகி தர்ணா

திமுகவுடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தி; காங்கிரஸ் நிர்வாகி தர்ணா
X

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி சேவா தளம் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி

திருச்சியில் திமுகவுடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சி சேவா தளம் நிர்வாகி காங்கிரஸ் அலுவலகம் முன்பு தர்ணா

திருச்சியில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மாநகரில் உள்ள 65 வார்டுகளுக்கும், வார்டு பங்கீடு செய்வது தொடர்பான கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனையடுத்து திருச்சி காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு காங்கிரஸ் கட்சி சேவா தளம் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி இன்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியிக்கு குறைந்தது 16 இடங்களை கட்சி தலைமை பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் தலைமை சரியான முடிவு எடுக்காவிட்டால் தான் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அவரது புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரத்தை கையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். சிறிது நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்