திருச்சியில் தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர்

திருச்சியில் தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர்
X

திரு்ச்சியில்  பேரிடர் மேலாண்மை மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

திருச்சியில் வெள்ளத்தை எதிர் கொள்ள தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நகரின் பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநகர போலீசார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.மேலும் வெள்ளம் அதிகரித்தால் மக்களை மீட்பதற்காக பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி ஒரு ஆய்வாளர் 10போலீசார் கொண்ட தலா இரண்டு பேரிடர் மேலாண்மை மீட்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழுவினர் உரிய பாதுகாப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products