அரியலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டு

அரியலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டு
X

அரியலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு திருச்சி சரக டி.ஐ.ஜி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தைச் சோந்த ராஜகோபால் மகன் ராஜேந்திரன் என்பவர் தனது செல் போனிற்கு செல்போன் டவர் அமைப்பதற்கு முன்பணம் ரூ. 40,00,000 மற்றும் மாத வாடகை ரூ. 40,000 தருவதாக வந்தது. இதனைநம்பி 2018 ஜனவரி29 முதல் 2020 நவம்பர் 9 வரை செல்போனில் தொடர்பு கொண்டு சிறுசிறு தொகையாக இதுவரை ரூ.23,98,900 ஏமாந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம்காவல் நிலையத்தில் கடந்த 14.05.2021 –ம் தேதி அன்று புகார் அளித்தார்.

அதன் பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரது வங்கி கணக்கில் ரூ.9,33,745 முடக்கம் செய்துள்ளனா். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாமற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு)இணையக் குற்றப்பிரிவு திருமேனி, உத்தரவின் படி இணையக்குற்ற காவல் நிலையகாவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன்,தலைமை காவலா்கள் உள்பட 5 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு டெல்லி சென்று இந்திராநகர் என்ற இடத்தில் சுப்பிரமணியத்தின் மகன் மருதுபாண்டியன் (37), சண்முகம் மகன்ராஜேஷ்(36), ராமசாமி மகன் முருகேசன் (40), பாலகிருஷ்ணன் மகன் ராஜ்கிரன் (42)ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து3 லேப்டாப், 42செல்போன்கள், 18 சிம்கார்டுகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், 19 ஏ.டி.எம் கார்டுகள்மற்றும் ரூ.1,00,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நபர்கள் டவர் அமைப்பது, லோன் தருவது, ஏர்போர்ட்டில் வேலை வாங்கி தருவது போன்றஇணையக்குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. எனவே நான்கு பேரின்வங்கி கணக்குகள் அவர்களின் அசையும் அசையா சொத்துக்கள் மீது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் கிரைம் தனிப்படையினரின் சிறந்த பணிக்காக அவர்களை நேரில்அழைத்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடாந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
மருத்துவத்திலிருந்து கல்வி வரை - AI மாற்றும் உலகம் - நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!