/* */

டி.ஜி.பி. சைலேந்திர பாபு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்துவது பற்றி ஆலோசனை

டி.ஜி.பி. சைலேந்திர பாபு திருச்சியில் இன்று நவீன தொழில் நுட்பம் பயன்படுத்துவது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

டி.ஜி.பி. சைலேந்திர பாபு நவீன தொழில்  நுட்பம் பயன்படுத்துவது பற்றி ஆலோசனை
X

திருச்சியில் போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் இன்று (01.02.2023) திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றகலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு பேசியதாவது:-

திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாத்து, ரோந்து பணி செய்யவும், குற்றவாளிகள், கெட்ட நடத்தைகாரர்கள் மீது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கஞ்சா மற்றும் போதை பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவும், தமிழக முதலமைச்சரின் முதல்வரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது துரித விசாரணை செய்ய வேண்டும்.

மேலும் தற்போது காவல்துறையில் நவீனமயமாக்கப்பட்ட பல சேவைகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலில் உள்ளது. அதில் கீழ்க்கண்ட சேவைகள் முக்கியத்துவம் பெற்றவை. ஸ்மார்ட் காவலர் ஆப் - ரோந்து செல்லும் காவலர்களுக்கு மிக உபயோகமாக உள்ளது. அதை அதிகளவில் காவலர்கள் உபயோகப்படுத்த வேண்டும். மேலும் பேஸ் ரெககனசேன் சாப்ட்வேர் ஆப், மூலம் சந்தேக நபர்களின் முக அடையாளங்களை ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள குற்றவாளிகளின் முக அடையாளங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், காவல் உதவி செயலியை கல்லூரி மாணவ மாணவிகளிடமும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களிடமும் இதை பயன்படுத்தும் முறை மற்றும் இதன் பயன்களை எடுத்துக்கூறி விழிப்புணா;வு பிரச்சாரம் மேற்கொண்டு இந்த காவல் உதவி ஆப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும் இந்த ஆப் மூலம் கெட்ட நடத்தைக்காரர்களின் தகவல்களை ஒப்பிட்டு அவர்களை தணிக்கை செய்ய வேண்டும். மேலும் ரோடு சேப்டி போர்ட்டல் மூலம் அதிகமாக விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.

ரோந்து செல்ல இடர்பாடான இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டறிய ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மைக்ரோவேவ் கம்மியுகேசன் செயலி காவல்துறையில் பல்வேறு செயல்பாடுகள் நடக்கிறது என்றும், காவல்உதவி செயலி மூலம் பொதுமக்களுக்கு 66வகையான உதவி செய்யப்படுகிறது என்றும், செல்போன் மூலம் பணம்பட்டுவாடா செய்து ஏமாந்தவர்களுக்கு சைபர்கிரைம் செல் செயல்படுகிறது என்றும், காவல் நிலையங்களில் இ-ஆபீஸ் மூலம் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. தற்போது நவீனமயமாகிவரும் உலகில் காவல்துறை பணிகளையும் நவீனமயப்படுத்தும் வகையில் மேற்படி செயலிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக பணிபுரியவேண்டும்.

இவ்வறு அவர் பேசினார்.


சிறப்பாக செயல்பட்ட திருச்சி சரகம் மற்றும் திருச்சி மாநகரில் உள்ள ஏழு குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கலந்தாய்வு கூட்டம் முடித்த பிறகு திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இந்தியாவின் முதன்மையான கணிணியில் ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய அரசின் தொழில்நுட்பதுறை, தொழில்நுட்பம் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் உயர்தொழில்நுட்ப தீர்வுகளை வடிவமைத்து உருவாக்கி செயல்படுத்தி வருபவற்றையும் பார்வையிட்டார். தேசிய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து அவசர காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களையும் உயிரினங்களையும் காப்பற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் அவசர கால தொடர்பு மற்றும் சேவைக்கான சிறப்பு ஆராச்சி மையம் துவக்க விழா நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.

இச்சேவைக்கான அவசர கால தொடர்பு எண் 112 ஆகும். இந்த தொடர்பு எண் பல்வேறு இயற்கை சீற்றங்கள், பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பு மற்றும் தேவையான உதவிகளை (காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை) ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வையிடல் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் இரயில்வே பெண்கள் குழந்தைகள் உதவி எண்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 1 Feb 2023 3:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...