நீங்களும் துப்பறியலாம்- ரூ.10 ஆயிரம் பரிசு: ஐ.ஜி பாலகிருஷ்ணன் அறிவிப்பு
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன்
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- திருச்சி மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி -4 ,புதுக்கோட்டை- 1, பெரம்பலூர் -2 ,அரியலூர் -2, தஞ்சாவூர் -5 ,மயிலாடுதுறை- 1) மற்றும் 3 ஆதாயக் கொலை வழக்குகளும் (புதுக்கோட்டை-1, திருவாரூர்-1, மயிலாடுதுறை -1) நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை கண்டு பிடிக்க ஆர்வம் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
குற்றவாளிகளை கண்டுபிடித்து தருபவர்கள் அல்லது வழக்குகள் கண்டுபிடிக்க பயனுள்ள தகவல்களை தருவோருக்கு சன்மானம் ஆக ஒவ்வொரு வழக்கிற்கும் ரூ .10,000 வெகுமதி வழங்கப்படும். இவ்வழக்குகளில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமும் விருப்பமும் உள்ள பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.
காவல்துறைத் தலைவர் அலுவலகம், திருச்சி -0431-2 333866, திருச்சி காவல்துறைத் துணைத் தலைவர் அலுவலகம் 0431-2333909,
காவல்துறை துணைத் தலைவர் அலுவலகம் தஞ்சாவூர்04362-277477, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள். திருச்சி-,9498100645,புதுக்கோட்டை 94981000730, பெரம்பலூர்-94981000690 அரியலூர்-9498100705 தஞ்சாவூர்- 9498100805, திருவாரூர்-9498100905 மயிலாடுதுறை-9442626792.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu