திருச்சி மாநகராட்சி தேர்தல்- அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில்...

திருச்சி மாநகராட்சி தேர்தல்- அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில்...
X
திருச்சி மாநகராட்சி தேர்தல் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகள், எந்தெந்த வார்டில் போட்டியிட எங்கு மனு தாக்கல் செய்யவேண்டும், அதற்கான அதிகாரி, வார்டுகளில் பெண்கள் மற்றும் எஸ்.சி.எஸ்.டி.க்கு ஒதுக்கீடு விவரம், பொது வார்டுகள் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய பட்டியல் திருச்சி மாநகராட்சி மைய அலவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளது.

மேலும் இந்த பட்டியலானது பொன்மலை, ஸ்ரீரங்கம், கோ அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த முழு விவர பட்டியலில் மாநகராட்சி தேர்தல் பற்றிய அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருப்பதால் ஒரே இடத்தில் அனைத்து புள்ளி விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.


திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த பட்டியலை ஆணையர் முஜிபுர்ரகுமான் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்