திருச்சியில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில்  தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சியில் தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு பெட்ரோல். டீசல். சமையல் எரிவாயு விலையினை தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரமைப்பின் தலைவர் ம.அய்யப்பன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் என்ஜினீயர் சமயபுரம் கோபிநாத் , லால்குடி தொகுதி செயலாளர் வெள்ளனூர் முருகானந்தம், மண்ணச்சநல்லூர் தொகுதி செயலாளர் மாஸ்டர் ராஜா, ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் புலிவலம் பாவேந்தர், மண்ணை ஒன்றிய செயலாளர் உலக.பிரபு , வடவூர் பிரதாப், அந்த நல்லூர் ஒன்றிய செயலாளர் விஜயராஜ் , வடவூர் திராவிட மணி, அ.லெனின் பிரபு ,ரா.கோபி ,அன்பில் பாலு புலிவலம் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story