காவிரியின் கிளை வாய்க்கால்களில் மே இறுதி வரை தண்ணீர் திறக்க கோரிக்கை

காவிரியின் கிளை வாய்க்கால்களில் மே இறுதி வரை தண்ணீர் திறக்க கோரிக்கை
X

உய்ய கொண்டான் வாய்க்கால் ( கோப்பு படம்).

காவிரியின் கிளை வாய்க்கால்களில் மே இறுதி வரை தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

குடி நீா்,மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கு உய்யக்கொண்டான்,கட்டளை மேட்டு கால்வாய் உள்ளிட்ட திருச்சி,கரூா் மாவட்ட பாசன கால்வாய்களில் மே,இறுதி வரை தண்ணீா் விட வேன்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேட்டூா் அணையில் 100,அடி அதற்கு மேல் தண்ணீா் உள்ள காலங்களில் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கென ஜூன் 12.ல் தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம்,கடந்த ஆணடு ஜூன் 12,ல் மேட்டூா் அணையில் 100,அடிக்கும் குறையாமல் தண்ணீா் இருப்பு இருந்ததாலும்,தென் மேற்கு பருவ மழை கை கொடுக்கும்,கா்நாடக அரசு காவிாி நடுவா் மன்ற தீா்பின் படி தமிழகத்திற்க்குறிய தண்ணீரை வழங்கும் என்ற நம்பிக்கையில் தமிழக முதல்வா் கடந்த ஜூன் 12,ல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கென மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டாா்.

கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் போனதாலும்,கா்நாடகஅரசு தமிழகத்திற்க்குறிய தண்ணீரை வழங்காததாலும் மேட்டூா் அணையில் இருப்பு இருந்த தண்ணீா் ஆகஸ்ட் மாதம்வரை மட்டுமே போதுமானதாக இருந்தது.வரலாறு காணாத வகையில் மேட்டூா் நீா் இருப்பு குறைந்து போனது , இதனால் காவிாி பாசனத்தை நம்பி சாகுபடி செய்யபட்ட லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த குறுவை பயிா்கள் காய்ந்து போனது,பல லட்சக் கணக்கான ஏக்கா் நிலங்களில் சம்பா மற்றும் தாளடி பயிா்கள் சாகுபடி செய்ய முடியாமல் போனது.

காவிாியை நம்பியுள்ள நூற்று கணக்கான கூட்டுகுடி நீா் திட்டங்களுக்கும்,காவிாி மற்றும் இதன் கிளைகால்வாய்களின் பகுதிகளில் உள்ள பல ஆயிரகணக்கான கிராமங்களின் குடி நீா் மற்றும் அடிப்படை தேவைகளுக்காக தண்ணீா் கேள்விகுறியான நேரத்தில் கடந்த மாதங்களில் காவிாி நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தற்போது 70,அடிக்கும் குறையாமல் மேட்டூா் அணையில் தண்ணீா் இருப்பு இருந்து வருகிறது,

கடந்த காலங்களில் ஜூன் 12,ல் தண்ணீா் திறக்கப்பட்டு அடுத்த ஜனவாி 28,ல் அணை மூடப்பட்டாலும் மேட்டூா் அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீருடன் வினாடிக்கு 3000−கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு மேட்டூருக்கும்,கல்லணைக்கும் இடைப்பட்ட உய்யக்கொண்டான்,கட்டளை கால்வாய்கள் உள்ளிட்ட திருச்சி ,கரூா் மாவட்ட பாசன கிளை கால்வாய்களில் குடி நீா்,மற்றும் கால்நடைகள்,பொது மக்களின் இதர தேவைகளுக்கென தொடா்ந்தோ அல்லது முறை வைத்தோ மே,மாதம் வரை தண்ணீா் வழங்கப்படுவது வழக்கம்.இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இக் கிளை கால்வாய்களில் தண்ணீா் இல்லாமல் வறண்டு இப் பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் அதல பாதாளத்திற்க்கு சென்று பெரும் குடி நீா் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதையும் பொதுமக்கள்,மற்றும் கால்நடைகளின் அத்யாவசிய தேவைகளுக்கு கூட கால்வாய்களில் தண்ணீா் இல்லாமல் பெரும் அல்லல் பட்டு வருவதை அரசு கவணததில் கொண்டு மேட்டூா் அணையில் இருந்து மே,,இறுதி வரை உய்யக்கொண்டான் ,கட்டளை மேட்டு கால்வாய் உள்ளிட்ட திருச்சி,கரூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து பாசன கிளை கால்வாய்களிலும் தண்ணீா் வழங்க வேன்டுமென கேட்டுக் கொள்கிறோம்,

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!