சொர்க்கவாசல் திறப்பு: டிச. 14-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

சொர்க்கவாசல் திறப்பு: டிச. 14-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் சொர்க்கவாசல் திறப்பான டிச. 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அலங்காரங்களில் உற்சவர் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறை நாளில் அரசின் அனைத்து துணை கருவூலங் களும், மாவட்ட கருவூலங்களும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!