திருச்சி புத்தக திருவிழாவில் மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி
திருச்சி புத்தக திருவிழாவில் மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் 8ஆவது நாளாக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திருச்சி புத்தகத் திருவிழா-2023ல் புத்தக அரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை இன்று (30.11.2023) ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தையும், மாணவர்களுக்காக வான் நோக்குதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் ஏராளமான மாணவர்கள் கண்டு களித்தனர்.
இன்று(30.11.2023) உரைவீச்சு நிகழ்ச்சியில் எழுத்தாளர் நக்கீரனின் திருச்சியும் சுற்றுச்சூழலும் என்னும் தலைப்பில் உரைவீச்சு நிகழ்ச்சியும், சிறார் சிறப்பு அரங்கம் சார்பில் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் இனியன் அவர்களின் விளையாட்டில் கதைக்கலாம் நிகழ்ச்சியும், கவிதை நேரம் நிகழ்ச்சியில் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தியின் கவிதை நிகழ்ச்சியும் மற்றும் பள்ளி கல்லூரிமாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
திருச்சி புத்தகத் திருவிழா-2023ல் நாளை (01.12.2023) கவிஞர் நந்தலாலா அவர்கள் கலையும் இலக்கியமும் எளிய மக்களுக்கு விருந்தா? மருந்தா? என்னும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார்.விருந்து என்னும் தலைப்பில் முனைவர் எஸ்.பி.பாஸ்கர், கீரனூர் கிலோனா மணிமொழி , மருந்து என்னும் தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் தனிக்கொடி, திருச்சி அன்னலெட்சுமி பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் சிறார் சிறப்பு அரங்கம் சார்பில் கட்டுரையியலாளர் ஜகன்நாதனின் இயற்கையை அறிய எப்படி நூல்கள் உதவும்? நிகழ்ச்சியும், கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஆசிரியர் எஸ்டிஜி.இளஞ்சேட்சென்னியின்கவிதை நிகழ்ச்சியும் மற்றும் பள்ளி கல்லூரிமாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu