திருச்சியில் மழையால் சேதமான சாலையை சரிசெய்ய களம் இறங்கிய போலீசார்

திருச்சியில் மழையால் சேதமான சாலையை சரிசெய்ய களம் இறங்கிய போலீசார்
X
திருச்சியில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலையை போலீசார் மணல் போட்டு சரி செய்தனர்.
திருச்சியில் மழையால் குண்டும் குழியுமாக சேதமான சாலையை சரிசெய்யும் பணியில் போலீசார் களம் இறங்கினர்.

திருச்சி மாநகரில் பெய்த மழையால் பல முக்கிய சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன.இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்துஅந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து மற்றும் பீட் போலீசார், மோசமான நிலையில் உள்ள சாலைகளை மண் கொட்டி சரிசெய்ய வேண்டும் என்று கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையில் கோட்டை, சிந்தாமணிஅண்ணா சிலை அருகே உள்ள சாலை, தென்னூார் அண்ணாநகர் உக்கிரகாளியம்மன் கோயில்சாலை, மேலபுலிவார்டு ரோடு, அரிஸ்டோ ரவுண்டானா, ராக்கின்ஸ் ரோடு உட்பட 10-க்கும் மேற்பட்டசாலைகளில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார்கள், குண்டும்குழியுமான சாலைகளில் மண் கொட்டி சரி செய்தனர். இதனால் பல இடங்களில் சாலைகள் தற்காலிகமாக சரியானது. இதனால் வாகன ஓட்டிகள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story