திருச்சியில் இனி தினசரி குடிநீர் வினியோகம்: மாநகராட்சி அறிவிப்பு

திருச்சியில் இனி தினசரி குடிநீர் வினியோகம்: மாநகராட்சி அறிவிப்பு
X
திருச்சியில் இனி தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சி பகுதியில் இனி தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு பழுதானதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத நிலை ஏற்பட்டது.

இதனால் கீழ்க்கண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளான அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில் நகர், முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு, மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், விவேகனந்தர் நகர், கீழகல்கண்டார் கோட்டை, அம்பேத்கர் நகர், தேவதானம், விறகப்பேட்டை, மகாலெட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், தெற்கு உக்கடை, திருவறும்பூர், வள்ளுவர் நகர், பழைய எல்லக்குடி, ஆலத்தூர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 35 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் பொன்மலைப்பட்டி மற்றும் சுப்ரமணிய நகர் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளிலிருந்து வழங்கப்படும் மத்திய சிறைச்சாலை, சுந்தர் ராஜன் நகர், ஜே கே நகர், செம்பட்டு, காஜாமலை EB காலனி, பழைய காஜாமலை, ரங்கா நகர், சுப்ரமணிய நகர், வி.என் நகர், தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் EB காலனி, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், LIC Colony New, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த் நகர்,சத்தியவானி கேகேநகர் மற்றும் சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 32 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.

தற்போது பெரியார் நகர் கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் 21.05.2024 அன்று முடிக்கப்பட்டுள்ள நிலையில், 23.05.2024 முதல் மேற்கண்டுள்ள 67 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு தினசரி குடிநீர் வழங்க சோதனை ஓட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டம் முடிவுற்றதும் இம்மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வழங்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!