திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் டி. ஜெயக்குமார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் டி. ஜெயக்குமார்
X

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் டி. ஜெயக்குமார் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது நடந்த ஒரு தகராறு தொடர்பான வழக்கில் கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அந்த நிபந்தனையின்படி திருச்சியில் தங்கி இருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வந்தார். அவரை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் டி. ஜெயக்குமார் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி