திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு

திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
X
திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர்ஆன்லைன் பிஸினசில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஒரு நாளைக்கு ரூ.6500 வீதம் 90 நாட்களுக்கு லாபம் கிடைக்கும் என நம்பி,; முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகவும், திருச்சி தென்னூர்ஆழ்வார்தோப்பை சேர்ந்த உசேன் என்பவர் தனது செல்போனில் பேசிய நபர் தன்னை வங்கி மேலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தனது சிபில் ஸ்கோரை உயர்த்தவதாக கூறி ஓடிபி விபரங்களை பெற்று கிரெடிட் கார்டிலிருந்து ரூ.45,000ஐ எடுத்து விட்டதாகவும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சங்கீதா என்பவர் தான் ஆன்லைன் ஜாப்பிற்கு தேர்வாகவேண்டுமென்றால் ஒரு கோர்ஸ் கம்ப்ளீட் செய்யவேண்டும் என்று கூகுள்பே மூலமாக ரூ.12,500- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் தாங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரிஆன்லைன் மூலமாக கொடுத்த மனுக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேற்படி ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் புகார்தாரர்களுக்கு திரும்ப கிடைக்கும் வகையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட வங்கியின் சட்ட அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர்கள் இழந்த பணம் ரூ.1,57,500 அவரவர் வங்கி கணக்குகளில் திரும்ப சேர்க்கப்பட்டது.

மேலும் இது போன்று பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசைவார்த்தைகளை கூறி வரும் விளம்பரங்களையோ அல்லது அலைபேசியின் வாயிலாக வரும் அழைப்புக்களையோ நம்பி ஏமாறாமல் இருக்கவும், அறிமுகமில்லாத நபர்கள் தன்னை பேங்க் மேனேஜர்என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வங்கி விபரங்களை கோரினால் அவர்களிடம் வங்கி விபரங்களையோ அல்லது சுயவிபரங்களையோ மற்றும் ஓடிபி விவரங்களையோ யாரிடமும் பகிர்ந்து ஏமாற வேண்டாம் எனவும் மாநகர போலீசார் கமிஷனர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!