குற்ற வழக்கில் தேடப்பட்ட நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது

குற்ற வழக்கில் தேடப்பட்ட நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது
X
குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், வெளி நாடு செல்லவிருந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் இருந்து குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த சலீம் (வயது 35) என்பவர் வந்தார். அவரது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சலீம், திருவாரூர் காவல் நிலையத்தில் வழக்கில் தேடப்படும் நபர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் திருவாரூர் போலீசாருக்கு விமான நிலைய அரிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திருவாரூர் போலீசாரிடம் சலீம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு