/* */

மினிபஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

மினிபஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

HIGHLIGHTS

மினிபஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
X

பைல் படம்.

திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது29). இவர் தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

கடந்த 30 -12 -2014 அன்று இவர் திருச்சி- கரூர் மெயின் ரோட்டின் அருகில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது .இதில் பலத்த காயமடைந்த மணிமாறன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதனையொட்டி மினி பஸ் டிரைவர் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதூர் உத்தமனூர் பழனியாண்டி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) என்பவரை ஜீயபுரம் போலீசார் கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ .ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் .அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Updated On: 5 April 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...