திருச்சியில் கொரியர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் பலி

திருச்சியில் கொரியர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் பலி
X

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்.

திருச்சியில் கொரியர் வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து கல்லுக்குழி ஜங்ஷன் வழியாக முன்னாள் சென்ற டூவீலரின் மீது எஸ்.டி. கொரியர் வண்டி மோதியதில் டூவீலரில் சென்ற சூட்சுடையார் (வயது 51) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future