திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை பற்றி கவுன்சிலர்கள் புகார்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை பற்றி கவுன்சிலர்கள் புகார்
X

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை பற்றி கவுன்சிலர்கள் பரபரப்பாக புகார் கூறினார்கள்.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மாமன்ற கூட்டரங்கில் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்று அடுக்கடுக்காக புகார் கூறினார்கள் .சில கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாத தான் மக்கள் அன்றாடம் தொல்லை அனுபவித்து வருகிறார்கள் .ஆதலால் உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர் .இன்னும் ஒருசில கவுன்சிலர்கள் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார் கூறினார்கள் .அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டாலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையே பெரும் பிரச்சினையாக சுட்டிக்காட்டப்பட்டது.அதற்கு பதிலளித்த மேயர் அன்பழகன் மாநகரப் பகுதி முழுவதும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil