திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கவுன்சிலர் சுரேஷ் கோரிக்கை

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கவுன்சிலர் சுரேஷ் கோரிக்கை
X

திருச்சியில் தொலைத்தொடர்பு கம்பம் சரிந்து விழுந்து கிடந்தது.

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கவுன்சிலர் சுரேஷ் கோரிக்கை விடுத்து உள்ளார்.

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு பகுதிக்குட்பட்ட செவந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்ததில் தெற்குஎடத் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன்( வயது 22) என்பவர் முழங்கால் மற்றும் கழுத்து. உள்ளங்கை, கால் விரல்களின் மேல் பகுதியில் காயமுற்று ரத்தக்கட்டுடன் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். கம்பம் விழுந்தது பற்றி வார்டு கவுன்சிலர் சுரேஷ் மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் உதவி பொறியாளருக்கு தகவல் கொடுத்தார். மேலும் பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுபோன்ற விபத்து சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் எவ்வித வரன்முறையின்றி தனியார் நிறுவன கம்பங்கள் பாதுகாப்பற்ற முறையில் நடப்பட்டு இருப்பதை கண்டறிந்து ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கோரிக்கை வைத்து உள்ளார்.

Tags

Next Story