திருச்சியில் மாநகராட்சி வணிக உரிமம் பெறாத நிறுவனத்திற்கு பூட்டு
உரிய வணிக உரிமம் பெறாமல் இயங்கி வந்த நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 26 குமரன் நகர் சிவன் கோவில் தெரு குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் வணிக உரிமம் பெறாமல் சோப்பு திரவம், சலவை வேதிப்பொருட்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை மூடி முத்திரையிடப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 26 குமரன் நகர் சிவன் கோவில் தெரு குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் வணிக உரிமம் பெறாமல் ஹிந்துஸ்தான் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சோப்பு திரவம், சலவை வேதிப்பொருட்கள் போன்ற அனேக வேதிப்பொருட்களை மொத்தமாக வரவழைத்து அதனை தேவையான அளவு கண்டைனர்களில் அடைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது.
அந்த நிறுவனத்தின் மீது அருகில் வசிப்போர் மேற்படி வேதிப்பொருள்களின் நெடி தாங்க இயலாமல் உள்ளது என புகார் அளித்ததன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவுப்படி மேற்படி இடம் சுகாதார ஆய்வாளரால் நேராய் செய்யப்பட்டு .அங்கு கடும் வேதிப்பொருள்கள் நெடி எழுவதை கண்டறிந்து மேற்படி நிறுவனத்தை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்றி அருகில் வசிப்பவர்களுக்கு தொல்லை இல்லாத இடத்தில் மாற்றம் செய்து கொள்ளும்படி பொது சுகாதார அறிவிப்பு வழங்கப்பட்டது. மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர் அறிவிப்பை பெற்று அதன்படி இணங்கி நடக்கவில்லை.
மேலும் அந்நிறுவன உரிமையாளர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அளித்ததன் பேரில் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் இணைந்து நேராய்வு நடத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் அந்த நிறுவனத்தால் வேதிப்பொருள்கள் நெடி எழுவதும் அது அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உணர்ந்ததாகவும் மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி இத்தொழில் இங்கு நடைபெறுவதாகவும் அருகில் சிவன் கோயில் உள்ளதாகவும் தெரிவித்து 1939 ஆம் வருடத்தியே பொது சுகாதார சட்ட விதிகளின்படி .மேல் நடவடிக்கை தொடர கடிதம் அளித்ததன் பேரில் மாநகராட்சி ஆணையர் மரு.இரா. வைத்திநாதன் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் மணிவண்ணன் மேற்பார்வையில் இன்று வெள்ளிக்கிழமை 02.02.2024 காலை 11 மணி அளவில் வட்டாட்சியர் ராஜவேல், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் வருவாய் ஆய்வாளர் அசோக் .மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இரா ஆல்பர்ட் . மேற்படி நிறுவனத்தை மூடி முத்திரையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில் மாநகராட்சியில் வணிகம் நடத்துபவர்கள் மாநகராட்சி வணிக உரிமம் பெற்றே வணிகம் தொழில் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu