திருவிழாவிற்கு முன்பாக சாலைகளை சீரமைக்க மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை

திருவிழாவிற்கு முன்பாக சாலைகளை சீரமைக்க மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை
X

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்.

திருச்சி புத்தூர் குழுமாயி கோவில் திருவிழாவிற்கு முன்பாக சாலைகளை சீரமைக்க மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி 23 மற்றும் 24 வது வார்டுகளில் சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் தெய்வங்களில் புத்தூர் குழுமாயி அம்மன் திருக்கோவில் மற்றும் குழுந்தலாயி அம்மன் கோவில்கள் முக்கியமானவை. புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் தொட்டி பாலம் அருகில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவின் போது குழுமாயி உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மன் புத்தூர் மந்தைக்கு வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். நான்கு நாட்கள் மந்தையில் நடைபெறும் திருவிழாக்களில் தேரோட்டம் நடைபெறும். முக்கிய விதிகள் வழியாக அம்மன் தேரில் வீதி உலா வருவார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்வார்கள். மேலும் அம்மனின் காவல் தெய்வத்திற்கு நேர்த்திக் கடனாக பக்தர்கள் ஆட்டுக்கிடா குட்டிகளை காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்போது அம்மனின் அருள் பெற்ற மருளாளி ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை குடிக்கும் காட்சிகளும் நடைபெறும் .இதேபோல குழுந்தாயி அம்மன் கோயிலிலும் திருவிழா நடைபெறும். இந்த இரு திருவிழாக்களும் இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது.


லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த விழாக்களில் குவிவார்கள். தற்காலிக கடைகளும் நிறைய அமைக்கப்படும். புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி புத்தூர் பகுதியில் போக்குவரத்து தடைபடும் என்பதால் மாற்று பாதைகளில் வாகனங்கள் இயக்கப்படுவது உண்டு.

இத்தகைய திருவிழா இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதால் அதற்கு முன்னதாக திருச்சி மாநகராட்சி 23 மற்றும் 24 வது வார்டு தெருக்களின் சாலை பணிகளை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு முன்னதாக முடித்து தேர்கள் செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகராட்சியின் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மேயர் அன்பழகனிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். தற்போது புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
2025 ஆம் ஆண்டில் ஏர்போட்ஸ் ப்ரோ 3வது தலைமுறைக்கான ஆப்பிள் அறிமுகப்படுத்துமா...? ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது....!