திருச்சியில் மக்களை தேடி மாநகராட்சி முகாம்

திருச்சியில் மக்களை தேடி மாநகராட்சி முகாம்
X

திருச்சி பாலக்கரையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி பாலக்கரையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில்இன்று நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி பெயர் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார். இதில் துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினார்கள் லீலா வேலு, பிரபாகரன், ரிஸ்வானா பானு, சண்முகப்பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story