திருச்சி மாநகர சாலைகளில் வார சந்தைகள் நடத்துவதற்கு மாநகராட்சி தடை

திருச்சி மாநகர சாலைகளில் வார சந்தைகள் நடத்துவதற்கு  மாநகராட்சி தடை

வார சந்தை (கோப்பு படம்)

திருச்சி மாநகர சாலைகளில் வார சந்தைகள் நடத்துவதற்கு மாநகராட்சி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதும், பல்வேறு பகுதி களில் வார சந்தைகளும் நடந்து வருகிறது.குறிப்பாக தில்லை நகர் 80 அடி ரோடு, உறையூர் ஹவுசிங் யூனிட், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராம லிங்க நகர் விரிவாக்கம், வயர்லெஸ் ரோடு, உடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வார ச்சந்தைகள் நடந்து வருகிறது.இங்கு அல்லித்துறை, எட்டரை கோப்பு, தாயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வார சந்தைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.இது அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வசதி யாக இருந்ததால் பொதும க்களிடையே வரவேற்பும் அதிகமாக இருந்தது.

இந்த வார சந்தைகளால் அந்தப் பகுதிகளில் நிரந்தரமாக கடை அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வார சந்தைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது மாநகரப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் வாரச் சந்தைகள், தினசரி மாலை நேர சந்தைகள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, மாநகரில் கடை அமைத்துள்ளவர்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர்.ஆனால் வார சந்தை வியாபாரிகள் எதுவும் செலுத்துவதில்லை. இது போன்ற வாரச் சந்தைகள் சாலைகளில் நடத்தப்ப டுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாகி மாநகராட்சிக்கு கூடுதல் பணி ஏற்படுகிறது.

ஆகவே புதிய பகுதிகள், மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளுக்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது.அதேசமயம் விவசாயிகள் வியாபாரிகள் வழக்கம் போல் வாகனங்கள் மூல மும், வழக்கமான மார்க்கெட் பகுதிகளிலும் வியாபாரம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றனர்.

Tags

Next Story