வணிகர் சங்க பேரவை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

வணிகர் சங்க பேரவை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்
X

திருச்சியில் வணிகர் சங்க பேரவை சார்பில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு பேசினார்.

திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சியில் வணிக நிர்வாகிகளுக்கான கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா தலைமை தாங்கினார். செயலாளர் எஸ். பி. பாபு வரவேற்று பேசினார். மாநில இணை செயலாளர் ராஜன் பிரேம்குமார், சிவசக்தி ராமநாதன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் திருச்சி மாவட்டத்தில் உணவு வணிகர் சங்கமும் உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து கலப்பட உணவுப் பொருட்களையும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் வணிகர்கள் தங்களது பதிவு, புதுப்பித்தல் போன்றவற்றை அந்தந்த பகுதிகளில் உள்ள ஆன்லைன் மையங்கள் மூலம் செய்ய அவர்களுக்கு பயிற்சி அளித்து எளிதாக பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம். வியாபார நேரத்தில் வணிகர்கள் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டார் கூட்டத்தில் முகமது யாசின், பாரதிராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!