திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 75,369 பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 75,369 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
திருச்சி மாவட்டத்தில் 13வது கட்ட முகாமில் ஒரே நாளில் 75,369 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று 13வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருச்சி மாநகர பகுதியில் 200 புறநகர் பகுதியில் 321என மொத்தம் 521 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக 75369பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் கோவிஷீல்டு முதல் கட்ட தடுப்பூசியை 28825பேர்களும், இரண்டாம் கட்ட தடுப்பூசியை 39868பேர்களும் எடுத்துக்கொண்டனர். கோவேக்சின் முதல் கட்ட தடுப்பூசியை 3595பேரும், இரண்டம் கட்ட தடுப்பூசியை 3081 பேர்களும் செலுத்திக்கொண்டனர்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!