திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு

திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்கும் வகையில் விரைவு படுத்தப்பட்டு உள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலயங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கட்டணமாக ரூ.700 நிர்ணயம் செய்யப்பட்டு பயணிகளிடம் வசூ லிக்கப்படுகிறது.

இதன் முடிவுகள் வருவதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. அதுவரை பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும். இதனை விரைவுபடுத்தும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் ராபிட் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் சுமார் ஒரு மணி நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு கட்டணமாக ரூ.1,370 நிர்ணயம் செய்யப்பட்டு பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனைக்கு இந்தியாவிலேயே திருச்சியில் தான் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!